actress samantha latest video post viral update
தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் சமந்தா. இவரது நடிப்பில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் யசோதா திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி & ஹரிஷ் ஆகியோர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மணி சர்மா இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வாடகை தாய் மோசடியை மையமாக வைத்து புதுமையாக உருவாகி இருக்கும் இப்படத்தை பலரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் நடிகை சமந்தா தனது twitter பக்கத்தில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது, நடிகை சமந்தா யசோதா திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு நீங்க பாத்துட்டீங்களா? எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டிருக்கிறார். அந்த மேக்கிங் வீடியோவில் நடிகை சமந்தாவின் கடினமான ஆக்சன் சீக்குவன்ஸ் காட்சிகள் உருவாக்கிய விதம் இடம்பெற்றுள்ளது. இதனைப் பார்த்து நடிகை சமந்தாவின் கடின முயற்சியை ரசிகர்கள் பாராட்டி அவரது கேள்விக்கு பதில் அளித்தும் வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…