உங்களுக்கு தாய்மொழி என்ன? தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு சாய் பல்லவி கொடுத்த பதில்

“பிரேமம்” என்னும் மலையாள படம் மூலம் அனைவருக்கும் மலர் டீச்சராக பரிச்சயமானவர் சாய் பல்லவி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அது மட்டுமல்லாமல் சாய்பல்லவியின் நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாலமே இருக்கிறார்கள் என்று கூறலாம்.

சமீபத்தில் சாய்பல்லவி நடித்து தெலுங்கில் வெளியான “ஷாம் சிங்காராய்” திரைப்படம் ரசிகர்களின் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் ஜூலை 15ஆம் தேதி திரைக்கு வர தயாராக இருக்கும் படம் தான் “கார்கி”.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக பிசியாக இருக்கும் சாய்பல்லவி அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பலவிதமான கேள்விகளுக்கு பதிலளித்து வந்துள்ளார். பின்னர் தொகுப்பாளர் ஒரு விவகாரமான கேள்வியையும் கேட்டுள்ளார். அதாவது நீங்கள் அறிமுகமானது மலையாள சினிமாவில் ஆதலால் உங்களது தாய்மொழி என்னவென்று கேட்டிருக்கிறார்.

தயங்காமல் சாய்பல்லவி நான் கொடைக்கானல், கோத்தகிரி அருகில் உள்ள படுவா என்னும் கிராமத்தில் பிறந்த பெண். அது தமிழகத்தில் தான் உள்ளது அதனால் தமிழகம் தான் எனது பூர்வீகம், தமிழ் தான் என் தாய்மொழி என்று அசராமல் பதில் அளித்திருக்கிறார். இதனை ரசிகர்கள் செம்ம பதில் என்று பாராட்டி வருகின்றனர்.

Actress saipallavi-latest-update
jothika lakshu

Recent Posts

இரண்டாவது திருமணம் குறித்து பரவும் வதந்தி.. பதிலடி கொடுத்த நடிகை மீனா..!

தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…

1 hour ago

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

Second Case of Seetharam Trailer [Tamil]

https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH

2 hours ago

விஜய் ரசிகர்களுக்கு ‘நல்ல’ செய்தி – விரைவில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்..?

விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…

3 hours ago

கமல் வழியில் கலக்கல்…அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு!

கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…

3 hours ago

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்!

தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…

3 hours ago