தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவருக்கும் பரிச்சயமான இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.
தற்போது பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தான் மேக்கப் இல்லாமல் நடிப்பது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் பேசிய அவர், ” எனது முதல் படமான பிரேமம் படத்தில் நான் மேக்கப் இல்லாமல் நடித்தேன். பார்வையாளர்கள் அதை ரசித்தனர். அது எனக்கு நம்பிக்கை அதிகரிக்க செய்தது. அதனால்தான் மேக்கப் இல்லாமல் நடிப்பதையே விரும்புகிறேன். இயக்குனர்கள் கூட இந்த விஷயத்தில் என்னை வற்புறுத்தியதே இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
