Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தனுஷ் 51 படம் குறித்து பேசிய ராஷ்மிகா. வைரலாகும் தகவல்

actress rashmika-speech-goes-viral

கேப்டன் மில்லர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். தனுஷின் 51-வது படமான இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சிறிய பூஜையுடன் நேற்று தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், தனுஷுடன் நடிப்பது குறித்து நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார். அவர் பேசியதாவது, இயக்குனர் சேகர் கம்முலா இப்படம் குறித்து கூறும்போதே இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்படவுள்ளது. தனுஷ் சார் மிகப்பெரிய நடிகர் அவருடன் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.”,

actress rashmika-speech-goes-viral
actress rashmika-speech-goes-viral