தென்னிந்திய திரை உலகில் தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரும் பொங்கல் பண்டிகைக்கு நேரடியாக வெளியாக இருக்கிறது. தமன் இசையில் உருவாகி இருந்த இப்படத்தின் மூன்று பாடல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் வரும் 24ஆம் தேதி நடைபெற இருப்பதாக சிறப்பு வீடியோவுடன் பட குழு நேற்றைய தினம் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தது.
இந்த விழாவில் தளபதி விஜய் கூற இருக்கும் குட்டி ஸ்டோரியை கேட்க ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதள பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து உங்களைப் பார்க்க 24ல் வருகிறோம் என்று ட்வீட் செய்து அனைவரது எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருக்கிறார். இவரது இந்த பதிவை ரசிகர்கள் உற்சாகத்துடன் வைரலாக்கி வருகின்றனர்.
See youuuu on 24th December for Varisu Audio Launch ❤️???? https://t.co/LDn6sQihEr
— Rashmika Mandanna (@iamRashmika) December 21, 2022

