தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகும் இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.
தில் ராஜூ தயாரிக்க தமன் இசையமைக்கும் இந்த படத்தில் தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பூஜையில் ராஷ்மிகா மந்தனா விஜயின் தோள் மீது சாய்ந்து போஸ் கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அவருக்கு டிஸ்டி சுத்தி போட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
#ThalapathyVijay with #RashmikaMandanna #Thalapathy66 #Thalapathy66Pooja pic.twitter.com/ly6SKEjf2r
— Kalakkal Cinema (@kalakkalcinema) April 6, 2022