Actress Rashmika Mandanna Rejects Vijay66
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.
ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் பிறகு அதை அவர் பொய்யான தகவல் என கூறினார். அதன் பின்னர் ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால் அவர் இந்தியில் ரன்பீர் கபூருடன் இணைந்து மிருகங்களுடன் இணைந்து பழகக் கூடிய ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தின் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரன்பீர் கபூர் நடிக்கயிருந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வேறு ஒரு நடிகை நடிக்க இருந்தார். மற்ற படங்களின் கால்ஷீட் காரணமாக இந்த படத்திற்கு அவரால் தேதி ஒதுக்க முடியாத காரணத்தினால் அவர் விலகிக்கொள்ள அதன்பிறகு ராஷ்மிகா ரன்பீர் கபூருடன் ஜோடி சேர்ந்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் ராஷ்மிகாவை அணுக இவரும் ஓகே சொல்லியுள்ளார்.
இதனால் ராஷ்மிகா மந்தனா தளபதி 66 படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…