பலாத்கார வழக்கில் மஞ்சுவாரியரிடம் நடத்திய விசாரணை

ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகை மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான திலீப், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது.

மேலும் வழக்கின் சாட்சியங்களை அழித்ததாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை நடிகை மஞ்சுவாரியர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3½ மணிநேரம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்களை நடிகை மஞ்சுவாரியர் தெரிவித்தார்.

அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர். மஞ்சுவாரியர் அளித்துள்ள தகவல்கள் மூலம் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படும் என்று தெரிகிறது.

Actress rape case Manjuwari interrogated
jothika lakshu

Recent Posts

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலின் டியூன் குறித்து மனம் திறந்து பேசிய ஏ ஆர் ரகுமான்..!

வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…

16 hours ago

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி

வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…

20 hours ago

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா?

‘வலை’​யில் 2 வேடங்​களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்​களில் நடிக்​கும் படத்​துக்கு ‘வலை’…

20 hours ago

‘பூக்கி” படத்தில் முதல்முறையாக… மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி

'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…

20 hours ago

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…

20 hours ago

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்​கிரி, வில்​லு, கந்தசாமி உள்பட பல…

20 hours ago