Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் வெளியிட்ட ரம்யா நம்பீசன். ரசிகர்கள் வைத்த கோரிக்கை

actress-ramya-nambeesan-latest-photos viral

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ரம்யா நம்பீசன். விஜய் சேதுபதி உட்பட பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் சமீப காலமாக பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் ரம்யா நம்பீசன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப சீசன் 3 ( சீனியர் ) நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

வாய்ப்பு இல்லாமல் இருக்கும் இவர் நாளுக்கு நாள் உடல் எடை கூடிக் கொண்டே செல்கிறார். இப்படியான நிலையில் ஓணம் கொண்டாட்ட ஸ்பெஷலாக அவர் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பழைய ஃபார்முக்கு வாங்க அதுதான் உங்களுக்கு அழகு என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.