Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பூஜா ஹெக்டே குறித்து வெளியான சர்ச்சைக்குரிய தகவல்..

Actress pooja-hegde-include-the-controversy

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் பூஜா ஹெக்டே. இவர் நெல்சன் இயக்கத்தில் வெளியான “பீஸ்ட்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிகமாக செலவு செய்துள்ளதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே படப்பிடிப்புக்காக சென்னை அல்லது ஹைதராபாத்துக்கு வரும்போது தன்னுடனே சிகை அலங்கார நிபுணர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என்று 10 முதல் 12 உதவியாளர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பின் போது உதவியாளர்களுக்காக அனாவசிய செலவு செய்யக்கூடாது என்று பூஜா ஹெக்டே விடம் அறிவுறுத்தப்பட்டு இருந்ததாம். ஆனால் பூஜா ஹெக்டே பட நிறுவனத்தின் பணத்தில் இருந்து தனது உதவியாளர்களுக்கு செலவு செய்திருக்கிறார் என்பதை சமீபத்தில் பீஸ்ட் படத்தின் வரவு செலவு கணக்குகளை பார்க்கும் போது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பட நிறுவனர்கள் உதவியாளர்களுக்கான ஹோட்டல், சாப்பாடு என்ற செலவு செய்த பில்களை பூஜா ஹெக்டே விற்கு அனுப்பிவைத்து அந்தப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்று கண்டிப்பான அறிவுறுத்தல் விடுத்திருப்பதாகவும். அதற்கு அதிர்ச்சியுடன் பூஜா ஹெக்டே அந்த பணத்தை திருப்பி செலுத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Actress pooja-hegde-include-the-controversy

Actress pooja-hegde-include-the-controversy