Actress Parvathi apologizes for liking sex offender's record
கேரள பாப் பாடகர் வேடன் மீது சில பெண்கள் பாலியல் புகார் தெரிவித்தனர். முதலில் இதனை மறுத்த வேடன் பின்னர் தவறை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டார். ஆனாலும் அவர் தவறை வெளிப்படையாக ஏற்கவில்லை என்று கண்டங்கள் எழுந்தன.
இந்த நிலையில் வேடன் பதிவை தமிழில் பூ, சென்னையில் ஒருநாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி முதலில் ‘லைக்’ செய்திருந்தார். பின்னர், பாலியல் குற்றவாளியை ஆதரிப்பதா? என்று அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதும் டிஸ்லைக் செய்துவிட்டார்.
இதுகுறித்து நடிகை பார்வதி விளக்கம் அளித்துள்ளதாவது: “வேடன் மீது குற்றம்சாட்டிய பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வேடனின் மன்னிப்பு பதிவு பாராட்டும்படியானது இல்லை என்பதை அறிவேன். வேடன் கேட்ட மன்னிப்பு பதிவு சரியானது அல்ல என்று பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்த்ததும் எனது ‘லைக்’கை நீக்கி தவறை திருத்தி விட்டேன். நான் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கமே நிற்பேன். எனது செயலால் பாதிக்கப்பட்டோர் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
O Kadhale (Song) | Dhanush, Kriti S | AR Rahman, Adithya RK, Mashook | Aanand…
பனைப் பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவதை மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
பரதநாட்டியத்தின் ஆழத்தைக் கொண்டாடும் ‘ப்ரோவோக் கலை விழா 2025’ – சென்னையில் நவம்பர் 1, 2 தேதிகளில்! சென்னையின் கலாசார…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிடம்…