Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாலியல் தொல்லை செய்ததாக நடிகை நித்யா மேனன் குற்றச்சாட்டு

Actress Nithya Menon sensational allegation

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தமிழில் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார்.

இறுதியாக தனுஷுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். கவர்ச்சிக்கு நோ சொல்லி தன்னுடைய நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் தமிழ் நடிகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஹீரோ யார் என பெயர் சொல்லாமல் தமிழ் திரையுலகில் ஹீரோ ஒருவர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக தெரிவித்துள்ளார். தமிழ் இண்டஸ்ட்ரியில் நான் பல சிக்கல்களை சந்தித்துள்ளேன். ஆனால் டோலிவுட்டில் நான் இப்படி எந்த ஒரு பிரச்சனையும் சந்தித்ததில்லை என தெரிவித்துள்ளார்.

நித்யா மேனனின் இந்த பேட்டியால் யார் அந்த தமிழ் நடிகர் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Actress Nithya Menon sensational allegation

Actress Nithya Menon sensational allegation