Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நித்யா மேனன் திருமணம் குறித்து வெளியான தகவல்.. குவியும் வாழ்த்து

actress nithya-menon-marriage-details

தமிழ் சினிமாவில் 108 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நித்யா மேனன். அதற்குப் பின் துல்கர் சல்மானின் ஓ காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து விஜயுடன் மெர்சல், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 என நடித்த அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் தற்போது தமிழில் தனுஷின் திருச்சிற்றம்பலம், மலையாளத்தில் ஆறாம் திருகல்பனா போன்ற இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ரிலீஸ் இருக்க தயாராக இருக்கிறது. மேலும் ஹைதராபாத் மாடர்ன் லவ் என்ற அந்தலாஜி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதை அடுத்து அவர் வேறு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் இருப்பதால் இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது.

மேலும் நித்யா மேனன் பிரபல மலையாள நடிகரான ஒருவரை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து நித்யா மேனன் எந்த ஒரு அதிகாரவபூர்வமான தகவலையும் கூறவில்லை. என்றாலும் ரசிகர்கள் அனைவரும் நித்யா மேனனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

actress nithya-menon-marriage-details
actress nithya-menon-marriage-details