Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கன்னத்தில் கை வைத்து சோகமாக இருக்கும் நயன்..வைரலாகும் போட்டோ

actress nayanthara sad photo

ஹனிமூன் சென்ற இடத்தில் சோகமாக அமர்ந்திருக்கும் நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு சில படங்களில் தீவிரமாக நடித்து வந்த நயன்தாரா சமீபத்தில் ஃபுட் பாய்சன் காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு இரண்டாவது முறையாக ஹனிமூன் சென்றுள்ள நிலையில் இருவரது புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிலும் தற்பொழுது வெளியாகி இருக்கும் நயன்தாராவின் சோகமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் கன்னத்தில் கை வைத்து கொண்டு மிகவும் சோகமாக எதையோ பார்த்து கொண்டிருக்கிறார் நயன்தாரா? இந்த புகைப்படத்தை கண்டு ஷாகான ரசிகர்கள் நயனுக்கு என்ன கவலை என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

actress nayanthara sad photo
actress nayanthara sad photo