Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முன்னணி நடிகருடன் முதல் முறை கூட்டணி. நயன்தாராவின் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

actress nayanthara joins with kamalhaasan in 75th movie

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக லேடிஸ் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார்.

ஜவான் மற்றும் இறைவன் என இரண்டு படங்களில் நடித்து வரும் நயன்தாரா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ‌‌‌‌‌

நயன்தாராவின் இத்தனை வருட திரைப்படத்தில் முதல் முறையாக கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

actress nayanthara joins with kamalhaasan in 75th movie
actress nayanthara joins with kamalhaasan in 75th movie