Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குனர் அட்லி திருமணத்தில் கலந்து கொண்ட நயன்தாரா… வைரலாகும் புகைப்படம்

Actress Nayanthara in Atlee Marriage

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார். தற்போது ஷாருக் கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜயை வைத்து படம் இயக்குவார் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் அட்லிக்கும் பிரியாவுக்கும் நடைபெற்ற திருமணத்தில் நடிகை நயன்தாரா ஆர்யா உடன் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ‌ ஆர்யா மற்றும் நயன்தாரா இருவரும் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nayanthara in Atlee Marriage
Actress Nayanthara in Atlee Marriage