Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மஞ்சுமா மற்றும் கௌதம் கார்த்திக்கு கிப்ட்டுடன் வாழ்த்து தெரிவித்த நயன்தாரா விக்னேஷ் சிவன்

actress nayan vicky congratulated the newly married couple with gifts

சினிமாவில் ரீல் பேராக நடிக்கும் நடிகர், நடிகைகள் இடையே காதல் மலர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டு பிரபல தம்பதியாக மாறி இருக்கும் நிகழ்வு ஏராளமாக நடந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் புது காதல் ஜோடியாக இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வந்த நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சுமா மோகன் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண விழாவில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஆனால் இவர்களது திருமணத்திற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியால் கலந்துக்கொள்ள முடியவில்லை, இதனால் அவர்கள் புதுமண தம்பதியினருக்கு கிஃப்ட் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அதில் “என்றும் மகிழ்ச்சியுடன் இதே காதலுடன் ஒற்றுமையாக இருங்கள்” என்றும் குறிப்பிட்டு இருக்கின்றனர். இதனை மஞ்சுமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு தனது நன்றியையும் தெரிவித்து இருக்கிறார்.

actress nayan vicky congratulated the newly married couple with gifts
actress nayan vicky congratulated the newly married couple with gifts