Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நந்திதா ஸ்வேதாவுக்கு வந்த நோய். அவரே சொன்ன தகவல்

actress-nandita-health-news

தென்னிந்திய திரை உலகியல் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா கடந்த ஆண்டு நேர்காணல் ஒன்றில் தான் மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு தீவிரமான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த சமந்தா தற்போது உடல்நிலை தேறி மீண்டும் படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது அந்த வரிசையில் தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை நந்திதா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் கடந்த சில வருடங்களாக fibromyalgia என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த நோயால் அவரது உடல் எடையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டுவருவதாகவும், தன்னால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை, சில சமயங்களில் நகரக்கூட முடியவில்லை என்றும் கூறி தனது வேதனையை தெரிவித்திருக்கிறார். இவரது இந்த பேட்டியின் தகவலால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

actress-nandita-health-news
actress-nandita-health-news