Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயின் வாரிசு படம் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.?

actress nandhini rai in varisu movie

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வம்சி இயக்கம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

மேலும் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. இப்படியான நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை நந்தினி ராய் என்பவர் நடித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மலையாளம் கன்னட மொழி படங்களின் நடித்துள்ள இவர் வாரிசு படம் மூலம் தமிழில் தடம் பதிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் எனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

actress nandhini rai in varisu movie
actress nandhini rai in varisu movie