Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கணவருடன் விவாகரத்தா? விளக்கம் கொடுத்த நமீதா

சினிமாவில் பிரபல நடிகையாக பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நமீதா. நாயகி எனக்கு நடித்தது மட்டுமின்றி கவர்ச்சி நடிகை ஆகவும் வலம் வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வரும் நிலையில் நடிகர் ஜீவி பிரகாஷ் விவாகரத்தை அறிவித்ததை தொடர்ந்து நடிகை நமீதாவின் கணவருடன் விவாகரத்தை அறிவிக்கப் போவதாக தகவல் பரவியது‌.

இந்த நிலையில் இது குறித்து நமிதாவை தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதாவது விவாகரத்து செய்தி பரவுவதற்கு முன்னர் தான் நான் என்னுடைய கணவருடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தேன். அப்படி இருக்கையில் இது போன்ற தகவல் இங்கிருந்து பரவுகிறது என தெரியவில்லை. இந்த விவாகரத்து வதந்தியை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

Actress Namitha about divorce update
Actress Namitha about divorce update