Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்த மஞ்சு வாரியார்

actress-manju-warrier-thunivu-interview

மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியார். அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வரும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி பல சுவாரசியமான விஷயங்களை நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், துணிவு படத்தில் இதுவரை செய்யாத பல விஷயங்களை செய்துள்ளேன், இப்படத்தில் நடித்த அனுபவம் மிகவும் புதிதாக இருந்தது, பல திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இப்படத்தில் தான் நடித்துள்ள கண்மணி கதாபாத்திரத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்றும் அதிகம் எதிர்பாராமல் மனம் திறந்து குடும்பத்துடன் சந்தோஷமாக திரையரங்கில் வந்து துணிவு திரைப்படத்தை காணுங்கள் என்று பகிர்ந்திருக்கிறார்.