மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நேற்றைய முன் தினம் உலக அளவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் துணிவு திரைப்படத்தில் கண்மணி என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தால் நெகிழ்ச்சி அடைந்த நடிகை மஞ்சு வாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில் தல அஜித் அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு தேங்க்யூ சார் என்று நடிகர் அஜித்திற்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
THANK YOU SIR! FOR BEING YOU! ❤️#AjithKumar #AK pic.twitter.com/pzGJFkVvXx
— Manju Warrier (@ManjuWarrier4) January 13, 2023

