Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“இனிமையான மனிதர் மணிரத்னம்”மனிஷா கொய்ராலா நெகிழ்ச்சி பதிவு

Actress manishakoirala-viral-post-about-manirathnam

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மனிஷா கொய்ராலா. தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான பம்பாய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கமல்ஹாசனுடன் ‘இந்தியன்’, அர்ஜுன் ஜோடியாக ‘முதல்வன்’, ரஜினிகாந்துடன் ‘பாபா’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

பாலிவுட் திரை உலகில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக விளங்கும் இவர் 2010-ல் நேபாள தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு இரண்டு வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். அதன் பிறகு புற்றுநோயல் பாதிக்கப்பட்டிருந்த மனிஷா கொய்ராலா அமெரிக்கா சென்று ஒரு வருட தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் மனிஷா கொய்ராலா பொன்னியின் செல்வன் 2 நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்தினத்தை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர் அதில், “இனிமையான மனிதர் மணிரத்னம். அவர் படத்தில் நடித்தது மிகவும் நிறைவாக இருந்தது. மணிரத்னம் படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளன. அவர் ஒரு பொக்கிஷம். மணிரத்னத்தின் ஒவ்வொரு படமும் தலைசிறந்த படைப்புகள்” என்று பாராட்டி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Manisha Koirala (@m_koirala)