தமிழ் சினிமாவில் பேட்ட என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். திரையுலகைச் சேர்ந்த பிரபல எடிட்டரின் மகளான இவர் தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்துள்ளார்.
படங்களில் பிஸியாக நடித்து வருவது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் இவர் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர் ஒருவர் இவரது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக பதிவு செய்துள்ளார். தற்போது திடீரென அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவ தொடங்கியுள்ளது.
இதனால் மாளவிகா மோகனன் அது போலியான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம். ஒருவேளை உங்களது கண்ணில் அந்த புகைப்படம் தென்பட்டால் அது குறித்து புகார் அளியுங்கள் என கேட்டு கொண்டுள்ளார். இதற்கு முன்னதாக ராஜா ராணி 2 சீரியலில் நடித்துவரும் பிரவீணாவின் புகைப்படம் ஒன்றும் மார்பிங் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Malavika Mohanan Request to Fans