Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரசிகர்களை கொள்ளை கொள்ளும் நடிகை லாஸ்லியா புகைப்படம்..!

actress losliya mariyanesan latest photos

இலங்கை பெண்ணான லாஸ்லியா அங்குள்ள தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று அந்நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார்.

அதனால் ரசிகர்கள் லாஸ்லியாவிற்கு ஓவியாவை போல் சமூக வலைத்தளங்களில் ஆர்மிகள் உருவாக்கி செயல்படுத்தி வந்தனர். அதன் பிறகு லாஸ்லியா தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இவரது நடிப்பில் பிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை மட்டும் பெற்றிருந்தது.

இந்நிலையில் பட வாய்ப்பு இன்றி தவித்து வரும் லாஸ்லியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியில் களம் இறங்கி போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை கவர்ந்து வர ஆரம்பித்தார். அந்த வகையில் அவர் தற்பொழுது ஒரு பக்க மாறாப்பை விலக்கி காண்பித்தபடி போட்டோ ஷூட் செய்து பகிர்ந்து இருக்கிறார். அப்புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கொள்ளையடித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.