Actress kicked out for hitting fellow contestant on Bigg Boss show
நடிகர் சல்கான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் இந்நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. 10 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய இயக்குனர் சஜித்கானை பிக்பாசில் போட்டியாளராக சேர்த்ததற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி நடிகை மந்தனா கரிமி சினிமாவை விட்டே விலகுவதாக அறிவித்தார். சஜித்கானை பிக்பாசில் இருந்து நீக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மத்திய மந்திரி அனுராக் தாக்கூருக்கு கடிதமும் எழுதினார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது அடிதடி சண்டை நடந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நடிகை அர்ச்சனா கவுதமுக்கும், இன்னொரு போட்டியாளரான ஷிவ் தாக்கரே என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது.
ஷிவ் தாக்கரேயை அர்ச்சனா கவுதம் முகத்தில் கைகளால் குத்தி கடுமையாக தாக்கி உள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டு உடல்நிலையும் குன்றியது. இதையடுத்து அர்ச்சனா கவுதமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கருப்பு படம் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் ஆர் ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
விமர்சனங்களால் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரீலிலா உருக்கமாக பேசியுள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடம் திரைப்படங்களில் நடித்து…
மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து ஆர்.ஜே பாலாஜி தகவல் ஒன்று பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆர் ஜே வாக…
வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் குறித்து சுவாரசிய தகவல்களை இயக்குனர் சரண் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
அண்ணாமலையின் பிறந்த நாளை குடும்பத்தினர் மறக்க,முத்து மீனா சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…