Actress Khushboo speaks on TVK Vijay's full-time political involvement
TVK விஜய்யின் முழு நேர அரசியல் ஈடுபாடு குறித்து நடிகை குஷ்பூ பேச்சு
விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 9-ந்தேதி வெளியாகிறது.
இப்படம்தான் எனது கடைசிப் படம் என எப்போது அவர் தவெக கட்சி துவங்கினாரோ அன்றே அறிவித்துவிட்டார். பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதற்காக, விஜய் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என சொன்னது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. திரைப்ப பிரபலங்களும் விஜய்யின் இந்த முடிவை கேட்டு சற்று அதிர்ச்சியானார்கள்.
அவ்வகையில் நடிகை குஷ்பூவும் விஜய்யின் இந்த முடிவு பற்றி தெரிவிக்கையில்,
‘விஜய் என்னுடைய தம்பி மாதிரி, என்னை அவர் அக்கா என்று தான் அழைப்பார். நான் அவரின் தீவிரமான ரசிகை, அவரின் நடிப்பு, நடனம் ஆகியவற்றை பார்த்து வியந்திருக்கிறேன். கண்டிப்பாக ஜனநாயகன் தான் அவரின் கடைசிப் படம் என நினைக்கும்போது கஷ்டமாக தான் இருக்கின்றது. அவர் ஒரு புதிய பயணத்தை துவங்கியிருக்கிறார். அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். என குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.
விஜய் பற்றி குஷ்பூபேசிய இந்நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…