தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தற்போது குணச்சித்திர வேடங்களில் பல படங்களில் நடித்து வரும் இவர் சினிமா, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி சோக்கல்லில் நடுவராகவும் பங்கேற்று வரும் இவர் உடல் எடை குறைத்த பிறகு தனது சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களையும் அவ்வப்போது கவர்ந்து வருவார்.
அந்த வகையில் நடிகை குஷ்பூ, 1988ல் கன்னடத்தில் வெளியான ரணதீரா பாடலுக்கு சுடிதாரில் நடனமாடி அப்படத்தில் ஹீரோவாக நடித்த கன்னட நடிகர் வி.ரவிச்சந்திரனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டு இருக்கிறார். மேலும், கன்னட ரசிகர்களுக்கு தான் நிறையவே கடன் பட்டு இருப்பதாகவும், அவர்கள் தனக்கு காட்டிய அன்பு மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவரது இந்த நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் கமெண்ட்ஸ் மற்றும் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
View this post on Instagram