கணவர் குறித்து பேசி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பனான அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் விஜயும் கலந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பட விழாக்களிலும் திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது கணவர் குறைத்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார் அதில், திருமண வாழ்க்கை எனக்கு பெரியதாக மாறியதாக தெரியவில்லை. நான் எப்போதும் போல் தான் இருக்கிறேன் ஆனால் எங்கு சென்றாலும் புகைப்படம் மட்டும் எடுக்கிறார்கள் நிறைய அட்டென்ஷன் கிடைக்கிறது. இது எனக்கு பழகினாலும் என் கணவருக்கு பழக்கம் இல்லை அது அவருக்கு சங்கடத்தையே ஏற்படுகிறது.
இருந்தாலும் இது குறித்து அவர் எதுவும் சொல்வதில்லை எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார் அவர் மீடியா முன் வர கூச்ச பட்டாலும் என்னோட கேரியருக்கு முக்கியம் என்று அவர் புரிந்து கொள்கிறார். என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.