Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி விஜய்க்கு தனது காதலனை அறிமுகம் செய்து வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்.!

actress keerthy suresh in 13 years love story

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் மொழி தமிழ் படங்களில் பிசியாக நடித்த வரும் இவர் தமிழில் விஜயுடன் இணைந்து பைரவா, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் காதலன் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் பத்திரிக்கையாளர் பிஸ்மி. அவர்களது யூடியூப் பக்கத்தில் சினிமா செய்திகள் குறித்து பேசும்போது கீர்த்தி சுரேஷ் காதல் கதையை தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பனை கிட்டத்தட்ட 13 வருடங்களாக காதலித்து வருகிறாராம். அவர் கேரளாவில் பல இடங்களில் ரெஸார்ட் வைத்து நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

மேலும் அதைவிட ஹைலைட் என்னவென்றால் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலனை விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். விஜயின் கீர்த்தி சுரேஷின் காதலன் பிறந்த நாளுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கும் ஒருவர் இந்த தகவலை தன்னிடம் புகைப்படத்தை காட்டி கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு குடும்பத்தினருக்கும் திருமணத்தில் சம்பந்தம் என்னவோ இன்னும் நான்கு வருடங்கள் கழித்து தான் திருமணம் எனவும் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர் பிஸ்மி பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.