கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். லியோ திரைப்படத்தில் மும்பரமாக நடித்து வரும் இவர் நேற்றைய தினம் நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
நேற்று முழுவதும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது. மேலும் விஜய்யின் இந்த செயல் விரைவில் அரசியலுக்கு வருவதற்கான அடித்தளம் தான் என்று பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய பதிவுகளை பகிரும் பிரபல நடிகை கஸ்தூரி விஜய்யை பாராட்டி வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், “Hats off தளபதி விஜய். விஜய் மக்கள் இயக்கம் பாராட்டுக்குரியது. இனி அடுத்து என்ன என கூர்ந்து கவனிக்கும் தமிழகம். ஜூன் 22-இல் பெரிதாக எதிர்பார்க்கலாமா..?” என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
Hats off தளபதி விஜய்.
விஜய் மக்கள் இயக்கம் பாராட்டுக்குரியது.
இனி அடுத்து என்ன என கூர்ந்து கவனிக்கும் தமிழகம்.
June 22 can we expect something big? #VIJAYHonorsStudents #Leo #VijayMakkalIyakkam @actorvijay pic.twitter.com/DIBi8Roahq— Kasturi (@KasthuriShankar) June 17, 2023