தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கஸ்தூரி. நாயகியாகும் குணச்சித்திர வேடங்களிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பங்கேற்றார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் நேற்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று அது குறித்து விளக்கமளித்துள்ளார். யாரை ஏமாற்றுவதற்காக அந்த புகைப்படத்தை வெளியிடவில்லை தற்போது நான் நடித்து வரும் தெலுங்கு படத்தின் புகைப்படங்கள் தான் அவை என தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு மிஸ்டர் பிரகனன்ட் என டைட்டில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று கஸ்தூரி கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Proud of my amazing tweeple – no fooling you guys ! But I was telling the truth- this is my look in my new telugu movie 'Mr Pregnant'. It's a great premise .Check out the pics on my Instagram account @actresskasthurihttps://t.co/ZRNIbYABx7 https://t.co/wcEDb13jw7
— Kasturi Shankar (@KasthuriShankar) April 2, 2022