Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குழந்தையுடன் இருக்கும் க்யூட் வீடியோ வெளியிட்ட காஜல் அகர்வால்

actress kajal agarwal latest insta video viral

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்து டாப் ஹீரோயினியாக வலம் வரும் இவர் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த காஜல் அகர்வால் அக்குழந்தைக்கு நீல் கிச்சுலு என்னும் பெயரை வைத்திருந்தார்.

குழந்தையை பெற்றெடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது குழந்தையுடன் செலவிடும் அழகான நேரங்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வரும் காஜல் அகர்வால் தற்போது தனது குழந்தையுடன் நீச்சல் குளத்தில் ஆனந்தமாக ஆட்டம் போடும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அந்த க்யூட்டான வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.