தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல ரசிகர்களை கொள்ளை கொண்ட முன்னணி நடிகை தான் காஜல் அகர்வால். இவர் லாக்டவுன் நேரத்தில் கௌதம் கிச்சலு என்னும் மும்பை தொழிலதிபரை நீண்ட நாள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பின்பு கர்ப்பம் அடைந்திருந்த காஜல் அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கர்ப்ப காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களிடம் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருப்பார்.
அதற்குப்பின் அண்மையில் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த காஜல் அகர்வால் தனது மகனுக்கு நீல்ஸ் கிச்சலு என்னும் அழகான பெயரை வைத்துள்ளார்.
குழந்தை பிறந்து நீண்ட மாதங்களுக்குப் பிறகு நடிகை காஜல் அகர்வால் தனது மகன் முதல் முதலில் தனது பிஞ்சு கால்களால் மண் தரையில் நிற்கும் அழகான புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்து வந்த ரசிகர்கள் செம க்யூடாக இருக்கிறது என்று தங்களுடைய கமெண்ட்களை பதிவு செய்து வருவதோடு வைரலாகி வருகின்றனர்.
View this post on Instagram