Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குடும்பத்துடன் கோவாவில் காஜல் அகர்வால்.. வைரலாகும் வீடியோ

Actress Kajal Agarwal Family Outing Video

நடிகை காஜல் அகர்வால் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் உள்ள திரைப்படங்களில் டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். அதையடுத்து காஜல் அகர்வால் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பை தொழிலதிபரான கௌதம் கிட்சலு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அதற்குப் பின் சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த காஜல் அகர்வால் கர்ப்பமான பிறகு அப்ப படங்களில் இருந்து விலகி விட்டார். அதற்குப் பின் அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்த காஜல் அகர்வால் அக்குழந்தைக்கு நெயில் கிட்சலு என்ற பெயரை வைத்துள்ளார்.

தற்போது தனது குடும்பத்துடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றிருக்கும் காஜல் அகர்வால் த்தில் தனது குழந்தை முதல் முதலில் மண் தரையில் கால் பதித்திருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது காஜல் அகர்வால் தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் சுற்றுலாவில் குதூகலமாக இருக்கும் வீடியோ பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பதிவு வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.