சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
அது மட்டுமல்லாமல் ஒர்க் அவுட்டில் தீவிர கவனம் செலுத்தி வரும் இவர் தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை சமீபத்தில் வெளியிட திரையுலக பிரபலங்கள் பலரும் மிரண்டு போய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் நடிகர் கார்த்தி முற்றிலுமாக பீஸ்டு மோட் அண்ணி என சொல்லி கமெண்ட் செய்துள்ளார். கார்த்தியின் இந்த கமெண்ட் இருக்கு ஜோதிகா தேங்க்யூ கார்த்திக், இதற்கு பத்து மாதங்கள் ஆனது என தெரிவித்துள்ளார்.
கார்த்தி மட்டுமல்லாமல் நடிகர் மாதவன், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், கிகி விஜய் என பலர் கமெண்ட் அடித்து பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram