Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 நடித்த கங்கனா ரனாவத்தை வாழ்த்திய ஜோதிகா

actress jyothika appreciates chandramukhi2 heroine kangana

லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் நட்சத்திர நடிகரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இத்திரைப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். காமெடி ஹாரர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க, ‘சந்திரமுகி 2’ படத்தின் வெளியீட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதியன்று உலகம் முழுதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில், சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தின் தோற்றம், கதாபாத்திரம் ஆகியவை குறித்த எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் ‘சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா, ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தைப் பாராட்டி சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்,

” இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன்.

சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள்.

நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி. வாசு சாருக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

actress jyothika appreciates chandramukhi2 heroine kangana
actress jyothika appreciates chandramukhi2 heroine kangana