Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என் அம்மா பிறந்தநாளில் இதை கண்டிப்பாக செய்வேன்.. ஜான்வி கபூர் ஓபன் டாக்

Actress Janvikapoor Latest Interview

பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்பவர்தான் ஜான்வி கபூர். இவர் பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் “தடாக்” என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜான்விகபூர் அடுத்து அவர் நடிப்பில் ‘குட் லக் ஜெர்ரி’ என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழில் நயன்தாராவின் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

அதற்குப் பின் அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டியில் தனது அம்மா கைவிட்ட பழக்கத்தை குறித்து ஜான்வி கபூர் கூறியுள்ளார். அதாவது அவர் என் அம்மா சினிமாவில் நடித்து கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாளுக்கு திருப்பதி கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் திருமணம் முடிந்த பிறகு ஏனோ அதை நிறுத்திவிட்டார்.

அதனால் என் அம்மாவின் இந்த பழக்கத்தை நான் செய்ய வேண்டும் என்று என் உள் மனதில் தோன்றியது. ஆகவே என் அம்மாவின் பிறந்தநாளன்று ஆண்டுதோறும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்து வருகிறேன் மேலும் புத்தாண்டு தினத்தன்று திருப்பதிக்கு சென்று வருவேன் என்று பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

Actress Janvikapoor Latest Interview
Actress Janvikapoor Latest Interview