Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உங்களுடன் நடிக்க ஆசை.ஜான்வி கபூர் ஓபன் டாக்

Actress janvi-kapoor-wants-to-act-with-vijay-sethupathi

பாலிவுட் திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்விகபூர். இவர் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் அவர். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகை ஜான்வி அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படுவதாக பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர், நானும் ரவுடிதான் திரைப்படத்தை நூறாவது முறையாக பார்த்த பிறகு விஜய் சேதுபதிக்கு போன் செய்தேன், அவரிடம் சார் நான் உங்கள் தீவிர ரசிகை, உங்களுடன் ஏதேனும் ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து அழைத்தால், அதற்கான ஆடிஷனில் கலந்து கொள்கிறேன் என்று கூறினேன், அதற்கு அவர் ஐயோ எனக்கு ஒரு ஆச்சரியப்பட்டதாக கூறியிருக்கிறார். நேர்காணலில் இவர் பகிர்ந்து உள்ள இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

Actress janvi-kapoor-wants-to-act-with-vijay-sethupathi
Actress janvi-kapoor-wants-to-act-with-vijay-sethupathi