Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

96 படத்தின் நடிகை கௌரி ஜி கிஷன் வீடியோ இணையத்தில் வைரல்.!

actress gauri ji kishan hot look photoshoot video

தென்னிந்திய நடிகைகளில் தற்போது பிரபல நடிகையாக வளர்ந்து வருபவர் தான் கௌரி ஜி கிஷன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் பள்ளி பருவத்தில் வரும் ஜானு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.

இப்படத்தின் மூலம் பல ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த இவர் அதையடுத்து உதயநிதி மனைவி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காகித ராக்கெட் படத்தில் சாருவாக நடித்திருந்ததன் மூலம் வெப் சீரிஸிலும் அறிமுகமாகியுள்ளார்.

சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் பல விருதுகளை தட்டி சென்ற கௌரி ஜி கிஷன் தற்போது கதாநாயகிக்காக வாய்ப்பை தேடி தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது புடவையில் ரசிகர்களை கவரும் வகையில் போட்டோ ஷூட் செய்திருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.