actress dharshu-quit-from-anna-serial
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
அதில் குறிப்பாக கார்த்திகை தீபம் சீரியல் நம்பர் 1 இடத்தில் இருந்து வர தொடர்ந்து அண்ணா சீரியல் நம்பர் 2 இடத்தை தக்க வைத்து வருகிறது. மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்கும் இந்த சீரியலில் நாயகி ஆக நித்தியா ராம் நடித்து வருகிறார்.
நான்கு தங்கைகளின் கனவை நிறைவேற்றி அண்ணனான சண்முகம் அவர்களை எப்படி கரை சேர்க்கிறார் என்பதுதான் இந்த சீரியல் கதை. இந்த நான்கு தங்கைகளில் ஒருவராக வீரா என்ற கதாபாத்திரத்தில் முதலில் தாரா நடித்து வந்த நிலையில் அவரது வெளியேற்றத்திற்குப் பிறகு தர்சு சுந்தரம் நடித்து வந்தார்.
தற்போது தனிப்பட்ட காரணங்களாலே குடும்பத்துடன் இருக்க வேண்டிய கட்டாயத்தினாலும் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தர்ஷு அறிவித்துள்ளார். இதனால் இனி அவருக்கு பதிலாக டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான கௌரி வீரா கதாபாத்திரத்தில் நடிப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
விரைவில் இது குறித்து உறுதியான தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…