சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோ, வில்லன், சிறப்பு வேடம் என எதுவாக இருந்தாலும் தரமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் தோல்வியை தழுவி இருந்தாலும் பல திரைப்படங்கள் வெற்றிவாகை சூடி உள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக மைக்கேல் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் சந்திப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக பிரபல நடிகை நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான தீப்ஷிகா தான் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


