Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சமந்தாவின் சிக்ஸ் பேக் புகைப்படத்திற்கு முன்னணி நடிகைகளின் கமெண்ட் வைரல்.

actress-comments-to-samantha-6-pack photo

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தற்போது இந்தியில் விரிவாகி வரும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கிறார். ஃபேமிலி மேன் 2 தொடரை இயக்கிய இயக்குனர் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா சமீபத்தில் தனது சிக்ஸ் பேக் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வரும் நிலையில் டாப் நடிகைகளும் சமந்தாவின் இந்த புகைப்படத்துக்கு கமெண்ட் அடித்துள்ளனர்.

ஆமாம் பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங் சூப்பர் கூல் என கமெண்ட் அடிக்க நடிகை ஸ்ரேயா ஸ்ட்ராங் கேர்ள் என கமெண்ட் பதிவு செய்துள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.