Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜீ தமிழ் பிரபலம்..

actress ayisha as contestant in bigg boss 6

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

கூடிய விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது. இதில் போட்டியாளராக பங்கேற்க விருப்பமுள்ளவர்களுக்காக அறிவிப்பு ஒன்று வெளியானது. மேலும் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அர்ச்சனாவை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இருந்து சத்யா சீரியல் நடித்து பிரபலமான ஆயிஷா இந்த சீரியலில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சத்யா சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி நகர்வதால் அடுத்த மாதம் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இதனால் ஆயிஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பது உறுதியாகி உள்ளது.

actress ayisha as contestant in bigg boss 6
actress ayisha as contestant in bigg boss 6