தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் வென்று இருந்தார்.
அதேபோல் விஜய் டிவியும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலித்து வருவதாகவும் சமீபத்தில் அவர்களுக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அர்ச்சனா அவ்வபோது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை தீப மலையை ஏறும் வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அந்த மலையில் ஏற தடை விதித்திருக்கும் நிலையில் வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் மலை உச்சிவரை ஏறி இறங்கி இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோவை வெளியிட்டு அதில் மலையில் ஏறி இறங்கியது கஷ்டமாக இருந்ததாகவும் இறங்குவதற்குள் இருள் சூழ்ந்து விட்டதால் அச்சமாக இருந்ததாகவும் நீங்கள் மழை பெறுவதென்றால் சீக்கிரமாக ஏறி மாலைக்குள் இறங்கி விடுங்கள் என்று அவரது அனுபவத்தை பகிர்ந்திருப்பது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


