Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விமர்சனம் செய்த ரசிகருக்கு அனிதா சம்பத் கொடுத்த தரமான பதிலடி

actress anitha sambath gave a perfect reply to wrong comments

தமிழ் சின்னத்திரையில் பிரபல செய்தி வாசிப்பாளராக அனைவருக்கும் பரிச்சயமானவர் அனிதா சம்பத். இதனைத் தொடர்ந்து தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். ஆனால் இந்நிகழ்ச்சியால் பல ட்ரோல்களையும் கமெண்ட்களையும் சந்தித்து வந்த அனிதா சம்பத் மீண்டும் disney+ hotstar-ரில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிகள் களமிறங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.

அதன் பிறகு தொடர்ந்து youtube மட்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவனம் செலுத்தி வரும் அனிதா சம்பத் பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் அனிதா சம்பத் சமீபத்தில் தனது instagram பக்கத்தில் தனது தோழியுடன் எடுத்துக்கொண்ட ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவிற்கு நெட்டிசன் ஒருவர் “பக்கா பொறுக்கி மாதிரியே இருக்க” என கமெண்ட் செய்திருக்கிறார். அதனை கண்டு டென்ஷனான அனிதா சம்பத் அவருக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர், உன்னை யாரோ இப்படி சொல்லி இருப்பாங்க போல அதான் இன்னொருத்தருக்கு சொல்லி ஆறுதல் பட்டுக்கிற. கெட் வெல் சூன். உனக்கு லைக் போட்டவனும் எங்கேயோ செம்மையா அடி வாங்கி இருப்பான் போல என்று கிண்டலாக ரிப்ளே கொடுத்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

actress anitha sambath gave a perfect reply to wrong comments
actress anitha sambath gave a perfect reply to wrong comments