டீனேஜ் காதல் குறித்து அமலா பால் ஓபன் டாக்.. ஷாக்கான ரசிகர்கள்

‘சிந்து சமவெளி’ என்று சர்ச்சையை கிளப்பிய படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அமலா பால் அதற்குப் பின் இவர் நடித்த மைனா திரைப்படம் இவருக்கு அதிகமான நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதற்குப் பின் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் சீக்கிரமாக நடிக்க ஆரம்பித்து பல ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

டாப் ஹீரோயினியாக இருந்த இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்த அசத்தியிருந்தார். ஆனால் அவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பித்து விட்டதால் தற்போது சிறிய பட்ஜெட் படங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்து விட்டார். இவர் தற்போது மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் “கடாவர்” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால், படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை அமலா பால் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ராஜு வூட்ல பார்ட்டி” நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் அவர் தனது டீனேஜ் காதல் குறித்து பேசியுள்ளார். அதில் ” தனக்கு டீனேஜ் வயது இருக்கும் போது ஒருவரை அமலாபால் காதலித்தாராம். அவருடன் ஒரு முறை திரையரங்கிற்கும் சென்று படம் பார்த்ததாகவும், கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்க்கும் பொழுது தனது காதலனுக்கு முத்தம் கொடுத்ததைப் பற்றி ஓபன் ஆக பேசி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் யார் என்பதை பற்றி தெளிவாக கூறவில்லை. தற்போது அவர் பகிர்ந்து உள்ள இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress amala-paul-shared-our-secret
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

8 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

8 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

8 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

8 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

8 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

8 hours ago