தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் ஆலியா மானசா.
ராஜா ராணி சீரியலில் தனக்கு ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு ஏழாவது மாதம் வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்று உள்ளது.
இவர் கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகி விடுவாரோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து நடிப்பேன் என ஆலியா கூறி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் இரண்டாவது குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளார்.
பிறப்பது பையனாக இருந்தால் அர்ஷ் என பெயர் வைப்போம். பெண்ணாக இருந்தால் லைலா என பெயர் வைப்போம் என்று தெரிவித்துள்ளார். எதுவாக இருந்தாலும் நல்லபடியாக பிறக்கட்டும் என ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.


