விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.
பின்பு அதே சீரியலில் தனது சக நடிகராக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அய்லா எனும் அழகிய பெண் குழந்தை உள்ளது/
திருமணத்திற்கு பிறகு மீண்டும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களையம் வீடியோக்களையும் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை ஆல்யா மானசா, தற்போது ராஜா ராணி 2 சீரியல் நடிகையுடன் இணைந்து விஜய் பாடலுக்கு செம குத்தாட்டம் போடும் வீடியோ வெளியாகியுள்ளது.