Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த உதவி,குவியும் பாராட்டு..!

actress Aishwarya Rajesh who helped the roadside people

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் காக்கா முட்டை திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது.

தமிழ் மொழி மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் Help on hunger குழுவுடன் இணைந்த சாலையோர மக்களுக்கு உதவி செய்துள்ளார்.

அதாவது சாலை ஓரத்தில் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் போர்வை இல்லாமல் படுத்து கொண்டு இருப்பவர்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் போர்வை போர்த்தியுள்ளார்.

இவரின் இந்த செயலைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.